×

வந்தவாசியில் விடிய விடிய சோதனை சார்பதிவாளர் அலுவலகத்தில் 1 லட்சம் பறிமுதல்: பெண் அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு துறை தீவிர விசாரணை

வந்தவாசி: வந்தவாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 1.08 லட்சம் சிக்கியது. இதுதொடர்பாக பெண் பத்திரப்பதிவு அதிகாரியிடம் தீவிர விசாரணை நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு செய்பவர்களிடம் இருந்து பணம் வசூலிப்பதாகவும், பத்திரப்பதிவு நடக்கும் நாட்களில் இரவு நேரங்களில் முறைகேடாக சார்பதிவாளரிடம் பணம் கைமாறுவதாகவும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், டிஎஸ்பி சரவணபெருமாள் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் இரவு வந்தவாசி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு திடீரென சென்றனர். இதையடுத்து அலுவலக கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்தனர். உள்ளே இருந்து யாரும் வெளியே செல்லவும், அதேபோல் வெளியே இருந்தவர்கள் உள்ளே வரவும் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து பத்திர எழுத்தர், பத்திரப்பதிவு செய்ய வந்த பிரபல தனியார் பள்ளியை சேர்ந்தவர்கள், அவரது உறவினர்கள் உள்பட பலரிடம் தனித்தனியாக  விசாரணை நடத்தினர். 4 மணி நேரம் அதிரடியாக விசாரணை நடந்தது.
இதையடுத்து ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டனர். ெதாடர்ந்து சார்பதிவாளர் கல்பனாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அதிகாலை 2 மணி வரை விசாரணை நடந்தது. அப்போது அவரிடம் இருந்து கணக்கில் வராத 1.08 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர். சார்பதிவாளர் கல்பனா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி பத்திரப்பதிவு துறைக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். விடிய விடிய நடந்த  இந்த சோதனையில் கணக்கில் வராத 1.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : office ,Vidya Vidya Reservation Officer ,Vasantha: Woman Investigation Department , Officer, Resident Officer, Female Officer, Vigilance Department
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...