×

தலிபான்கள் தாக்குதல் 12 போலீசார் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 12 போலீசார் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள குவாஷ் தைபா மாவட்டத்தை தலிபான் கைப்பற்ற முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து இங்கு காவல் துறையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. அப்போது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக மாகாண காவல்துறை தலைவர் ஜவ்ஸ்ஜான் கூறுகையில், “குவாஷ் தைபா மாவட்டத்தை கைப்பற்றும் தீவிரவாதிகள் முயற்சி தோல்வியடைந்தது. தாக்குதலில் 30 தலிபான்கள் கொல்லப்பட்டனர்” என்றார். கசினி மாகாணத்தில் நேற்று முன்தினம் தலிபான்கள் தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taliban ,policemen , Taliban ,attack ,12 policemen killed
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்