×

திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம் :13ம் தேதி தேரோட்டம்

தென்காசி : மிகவும் பிரசித்தி பெற்ற குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா வெகு விமர்சையாக நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று காலை 5.50 மணிக்கு கொடியேற்றதுடன் துவங்கியது. கொடியை ஜெயமணிசுந்தரம்பட்டர், கணேசன்பட்டர், பிச்சுமணி என்ற கண்ணன்பட்டர், மகேஷ்பட்டர் ஆகியோர் ஏற்றி வைத்தனர். இதில் கோயில் உதவி ஆணையர் செல்வகுமாரி, இலஞ்சி அன்னையாபாண்டியன், வர்த்தக சங்க தலைவர் காவையா, ஜோதிமுருகன், வேல்ராஜ், சர்வோதயா கண்ணன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் பரமசிவன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவனடியார்களின் சிவபூத கன வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. விழாவில் தினமும் காலை மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.

தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. விழாவில் 12ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 13ம் தேதி காலை 8.20 மணிக்கு மேல் நான்கு தேர்கள் ஓடும் தேரோட்டம் நடக்கிறது. 15ம் தேதி காலை 9.30 மணிக்கும் மாலை 7 மணிக்கும் நடராச மூர்த்திக்கு வெள்ளை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 16ம் தேதி காலை 10.30 மணிக்கு சித்திரசபையில் நடராசமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 18ம் தேதி காலை 9 மணிக்கு மேல் விசு தீர்த்தவாரி நடக்கிறது. 11 மணிக்கு மேல் திருவிலஞ்சிக்குமாரர் பிரியாவிடை கொடுக்கும் உபச்சாரம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், உதவி ஆணையர் செல்வகுமாரி மற்றும் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Thirukurippalanathaswamy , Aipasi loyal festival, Thirukurippalanathaswamy temple , 13th of the year
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!