×

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் உதகை மலைரயில் சேவைக்காக இரண்டு புதிய என்ஜின்கள் தயாரிப்பு

பொன்மலை: திருச்சி மாவட்டம் பொன்மலை ரயில்வே பணிமனையில், உதகை மலைரயில் சேவைக்காக இரண்டு புதிய என்ஜின்கள் தயாரிக்கப்பட உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகமண்டலத்திற்கு இயக்கப்படும் மலைரயில்கள் புகழ்பெற்றவை ஆகும். இங்கு இயக்கப்பட்டு வரும் ரயில் எஞ்சின்களின் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் நடைபெற்று வருகிறது.

தற்போது பழுதடைந்துள்ள மலைரயில் எஞ்சின்களின் பாகங்களை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து உதகை மலைரயில் சேவைக்காக இரண்டு புதிய என்ஜின்கள் தயாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : railway station ,Tiruvai Ponmala , Production,engines,ooty,Mountain Rail,Service,trichy Ponmalai,Railway,workshop
× RELATED பீஹார் கியூல் ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து