×

நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் நின்றுள்ளது : நக்கீரன் கோபால் பேட்டி

சென்னை:நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி ஆளுநர் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன்பின் நக்கீரன் கோபால் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக நீதித்துறை செயல்பட்டுள்ளது என்று கூறினார். இதையடுத்து நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் நின்றுள்ளது என்று கூறிய அவர், திறமையாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் , இந்து என். ராமுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும் ராஜ்பவன் பற்றிய செய்தியை புலனாய்வு செய்து நக்கீரனில் வெளியிட்டோம் என்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறினார். இதற்கிடையே முன்னதாக ஆளுநரின் துணைச்செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக தேச துரோக வழக்கில் கைதான நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : judiciary ,interview ,Nakheeran Gopal , The judiciary stands on freedom of expression: Nakheeran Gopal interview
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை...