×

நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய ஈரானுடான எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

டெல்லி: ஈரானுடான எண்ணெய் இறக்குமதி தொடரும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற எரிசக்தித்துறை கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய  அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஈரான் மீது அமெரிக்க பொருளாதார தடைகளை விதித்த போதிலும், இந்தியாவின் உள்நாட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதால் ஈரானுடான எண்ணெய் இறக்குமதி தொடரும் என்று  தெரிவித்தார்.  

ஈரானில் இருந்து எண்ணெய் வாங்குவதால், பொருளாதாரத் தடைகளில் இருந்து அமெரிக்காவிடமிருந்து விலக்கு பெற முடியுமா? இல்லையா? என்பது தெரியாது என்றும் இந்த நடவடிக்கை இந்தியாவின் வலிமையும், புதிய  தலைமையையும் காட்டுவதாகவும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் உலகளாவிய தலைவர்கள் எங்கள் தேவைகளை புரிந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள  வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால், வரும் நவம்பரிலும் ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Iran ,Dharmendra Pradhan ,country , Iran, Oil Import, Central Minister Dharmendra Pradhan
× RELATED ஈரானில் உள்ள மீனவர்கள் அனைவரையும் அழைத்துவர வேண்டும்