×

நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீதமான விளைவை சந்திக்க நேரிடும் : ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை; திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட கோபாலை, ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீதமான விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். ஆளுநரை சந்திக்க தங்களுக்கு இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறிய ஸ்டாலின், அவரை சந்திக்கும் போது கோபால் கைது பற்றி முறையிடுவோம் என்றார். கோபால் மீது பாய்ந்த சட்டம் எச்.ராஜா மீது ஏன் பாயவில்லை என வினவினார். அறநிலையத்துறை ஊழியர்களின் குடும்பங்களை கொச்சைப்படுத்தி பேசியவர் எச்.ராஜா என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nakheeran Kopal , Stalin, DMK chairman, Nakheeran Gopal, arrested
× RELATED மருத்துவ பரிசோதனையை முடித்து...