×

தமிழக அரசின் கைது நடவடிக்கைகளில் பாஜக தலையிட்டது இல்லை : பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை : தமிழக அரசின் கைது நடவடிக்கைகளில் பாஜக தலையிட்டது இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுகவை பின்னால் இருந்து இயக்கும் அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று கூறிய அவர், நிர்மலா தேவி விவகாரம் வெளிவந்தால் பலரின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் என்ற அச்சத்தின் வெளிபாடுதான் இப்படி நடக்கிறதோ என தோன்றுகிறது என்று கூறினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் சிந்தாதிரிபேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,arrests ,government ,Tamil Nadu , The BJP has not interfered in the arrests of the Tamil Nadu government: Ponnathirakrishnan
× RELATED ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி...