×

குன்னுாரில் தொடர் மழை : சுவர் இடிந்து வீடுகள் சேதம்

குன்னூர்: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில்  அவ்வப்போது மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதில் பேரட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பாரத் நகர் பகுதியில் ஏற்கனவே நடைப்பாதையுடன் தடுப்புச்சுவர் கட்டபட்டது. நேற்று முன்தினம் கனமழையால் இந்த பகுதியில் தடுப்பு சுவர் இடிந்தது. மேலும் நடைப்பதையில் விரிசல் ஏற்பட்டதுடன், ஐந்து வீடுகள் சேதமடைந்தது. இது குறித்து குன்னூர் எம்எல்ஏ சாந்திராமு ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தும் இது வரை அதிகாரிகள் யாரும் பார்வையிட வராததால் பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  தொடர்மழை பெய்யும்பட்சத்தில் மேலும் பாதிப்புகள், அதிகரிக்கும் என்பதால் சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடியிருப்புகள்,  மலைப்பாதை, மலைரயில் பாதைகளிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக குடியிருப்புகளின் முன்  மற்றும் பின்புறமுள்ள தடுப்புச்சுவர்கள், மண்திட்டு சரிந்து விழுவதால்  பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து, பெட்போர்டு, வெலிங்டன், சி.டி.சி  காலனி, காந்திபுரமபகுதிகளை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக மண் மற்றும் மணல் முட்டைகளை அடுக்கி  வைத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kunnar ,houses , Kunnuar, rain, homes
× RELATED கொடைக்கானல்: மரம் விழுந்ததில் 2 வீடுகள் சேதம்