×

ட்விட்டரை அதிர வைக்கும் #ME TOO : பிரபலங்கள் மீது குவியும் பாலியல் புகார்கள்

மும்பை; பாலியல் சீண்டல்களுக்கு உள்ளான பெண்கள் #ME TOO என்ற ஹேஷ்டேக் மூலம் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருவது இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெரும் நிறவனங்களில் பணியாற்றும் பெண்களால் கடந்த 2017-ல் துவக்கப்பட்ட இந்த ஹேஷ்டேக் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. இதில் தங்களுக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொந்தரவுகள் குறித்தும், சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்தும் பெண்கள் வெளிப்படையாக பதிவிட்டு வருகின்றனர். திர நட்சத்திரங்கள், இயக்குனர்கள், ஊடகத்தில் தொடர்புடையவர்கள் என பலர் மீது பெண்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர்.

இதனால் #ME TOO ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. ட்விட்டரில் பெண்கள் பகிரங்கமாக பாலியல் புகார் அடுக்கி வரும் நிலையில், புகாரில் தொடர்புடைய சில முக்கிய பிரபலங்கள் அதற்கு விளக்கமளித்தும், மன்னிப்பு கோரியும் பதிவிட்டு வருகின்றனர். பிரபல இந்தி நடிகரும், இயக்குனருமான ரஜத் கபூர், தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்தார் என பதிவிட்டனர். இதற்கு விளக்கமளித்துள்ள அவர், தம்முடைய செயலும், வார்த்தையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். இதே போல ஊடகங்கள் மற்றும் திரை துறையில் இருப்பவர்கள் மீது முன்னணி நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருக்கும் பெண்களும், பிரபலங்களாக இருப்பவர்களும் அடுத்தடுத்து #ME TOO மூலும் குற்றச்சாட்டுக்களை வைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : celebrities , Sexual harassment, hashtag, twitter, #ME TOO
× RELATED விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி: குவியும்...