×

நவராத்திரியை முன்னிட்டு சூடுபிடிக்கிறது கொலு பொம்மை விற்பனை

மதுரை: நவராத்திரி விழா துவங்கும் நிலையில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. நாடு முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் நவராத்திரி திருவிழாவுக்கு தனி இடம் உண்டு. நவராத்திரி திருவிழா காலங்களில் வீடுகள், கோயில்களில் கொலு வைத்து வழிபடுவர். இதற்காக, கொலு பொம்மைகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பூ மார்க்கெட் வரையிலும் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், ரயில்நிலையம் அருகே உள்ள பூம்புகார் கைவினைப்பொருள் விற்பனை  நிலையத்திலும் பல விதமான கொலுபொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில், தசாவதாரம், திருவிளையாடல் புராணம், ராமர் பட்டாபிஷேகம், திருமண கோலம் போன்ற பொம்மைகள், குழலூதும் கண்ணன், ராதாகிருஷ்ணன், பாபா, ராமாயணத்தில் சீதை, ராமன், மகாபாரத காட்சிகள்,

பழநி மலை, பள்ளி கொண்ட பெருமாள் மற்றும் பசு, மான், மயில், கிளி, யானை உள்ளிட்ட விலங்கினங்கள் என பல வடிவ பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ரூ70ல் இருந்து ரூ3 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரி ராம்தேவ் கூறும்போது,    ‘‘விநாயகர் சதுர்த்திக்கு, விநாயகர் சிலைகள் தயாரித்து முடிந்ததும், நவராத்திரி கொலுவுக்கான பொம்மைகள் தயாரிக்க துவங்கிவிடுவோம். அதன்படி, விதவிதமான கொலு பொம்மைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை சார்ந்தே இந்த கொலு பொம்மைகள் அமைக்கப்படுகின்றன. நவராத்திரி திருவிழா அம்மனுக்கு உகந்த திருவிழா என்பதால், பெண்கள் அதிகளவில் கொலுபொம்மைகள் வாங்கிச் செல்கின்றனர். பொம்மைகள் வடிவம் மற்றும் வேலைப்பாடுக்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kollu ,puppies ,Navratri , Navarathri, kolu doll, sale
× RELATED பெருநகர காவல் மோப்ப நாய் பிரிவுக்கு...