×

பணி நீக்கப்பட்ட பணியாளர்களுக்கு நிபந்தனைகளை தளர்த்தி போனஸ் வழங்க வேண்டும்: டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கு.பால்பாண்டியன் கூறியதாவது: கடந்த 3ம் தேதி டாஸ்மாக் சில்லறை மதுபானக்கடை பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்குவது குறித்த அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டது. ஆனால், இந்த போனஸ் அறிவிப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இந்த போனஸ் 1.4.2017 முதல் 31.3.2018 வரை பணியாற்றிய பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பல்வேறு காரணங்களால் 31.3.2018க்கு பின்னர் பணிநீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் பலருக்கு போனஸ் வழங்கப்படாத நிலை பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகிறது.
மேலும், 1.4.2017 முதல் 31.3.2018 வரை பணியாற்றிய அதற்கு பின்னர் பணிநீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், இவர்களுக்கு போனஸ் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் போனஸ் குறித்து வெளியிட்ட உத்தரவு 7வது பத்தியில் உள்ள நிபந்தனைகளை தளர்வு செய்து போனஸ் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், இதுகுறித்த கோரிக்கை மனுவை மேலாண்மை இயக்குனரிடம் கொடுத்துள்ளோம். மனுமீது உரிய பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The Taskmill Association , Tamil Nadu, Government, TASMAC
× RELATED கஜா புயல் காரணமாக போராட்டம்...