×

தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகத்துக்கு தற்காலிக தலைவர் நியமனம்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு பொறியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு

சென்னை: தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைக்கும் பணிகளை செயல்படுத்த ஓர் அமைப்பு ஏற்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த கழகம் முதன்மை செயலாளர் தலைமையிலான ஐஏஎஸ் அதிகாரிகள் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார். அவர் சேர்மன் அல்லது மேலாண்மை இயக்குனர் பொறுப்பில் அந்த ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகத்தின் தற்காலிக தலைவராக விபு நய்யார் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர், ஏற்கனவே, டான்சி மேலாண்மை இயக்குனராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இவரிடம் கூடுதலாக நீர்வள நிலவள திட்ட இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது, இந்த கழகத்தின் தலைவர் பொறுப்பையும் கவனிக்கிறார். இந்த கழகம் நெடுஞ்சாலைத்துறையில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் போன்று இயங்குகிறது. அதாவது முதன்மை செயலாளர் தலைமையில் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர் உள்ளிட்ட பொறியாளர்கள் அடங்கிய வட்டம், கோட்டம் உருவாக்கப்படுகிறது. அதற்கான பணியில் பொதுப்பணித்துறை தலைமை இறங்கியுள்ளது.

இந்த கழகம் மூலம் அனைத்து திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்படவிருப்பதால், நீர்வளப்பிரிவுக்கு மூடு விழா காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் சங்கம் சார்பில் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு  கழகத்தை உருவாக்கி வெளியிட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும். உடனடியாக இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chair ,Tamil Nadu Water Resources Reserve ,Raising Reconciliation Corporation Appointment: Engineer's Association for Struggle Against Tamil Nadu , Tamil Nadu Water Resources, TN Government, Engineer Association
× RELATED குறுக்கு வழியில் ஸ்டெர்லைட்டை திறக்க...