×

வேலன்சியா பார்சிலோனா போட்டி டிரா

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் வேலன்சியா - பார்சிலோனா அணிகளிடையே நடந்த லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. வேலன்சியா அணி சார்பில் இசக்கியேல் கரே 2வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார். பார்சிலோனா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி 23வது நிமிடத்தில் கோல் போட்டார். இந்த போட்டியில் வெற்றியை வசப்படுத்த தவறியதால், பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு பின்தங்கியது. 8 லீக் ஆட்டங்களின் முடிவில் செவில்லா (16), பார்சிலோனா (15), அத்லெடிகோ மாட்ரிட் (15), ரியல் மாட்ரிட் (14), எஸ்பேன்யால் (14) அணிகள் முன்னிலை வகிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Valencia ,Barcelona ,Tournament , Valencia,Barcelona,Tournament
× RELATED அல்போன்சா கல்லூரியில் தென்தமிழக அளவிலான கைப்பந்து போட்டி