இந்தியாவுடன் டி20 தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் போலார்டு, டேரன் பிராவோ சேர்ப்பு

ஜமைக்கா: இந்திய அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி வீரர்கள் போலார்டு, டேரன் பிராவோ இருவரும் டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் ஐதராபாத்தில் 12ம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெற உள்ளன.இந்த தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் மற்றும் டி10 தொடர்களில் விளையாட உள்ளதால், இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்க முடியாது என நட்சத்திர வீரர் கிறிஸ் கேல் விலகிக் கொண்டுள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக ஜேசன் ஹோல்டர், டி20 போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக கார்லோஸ் பிராத்வெய்ட் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனுபவ வீரர்கள் கியரன் போலார்டு, டேரன் பிராவோ இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நட்சத்திர வீரர்களுடன் மோதல்  போக்கை கடைப்பிடித்து வந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், அடுத்த ஆண்டு உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளதால் சமரச முயற்சியில் இறங்கியுள்ளதன் விளைவாக பல வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர்.ஒருநாள் தொடருக்கான அணி: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பேபியன் ஆலன், சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, சந்தர்பால் ஹேம்ராஜ், ஷிரோன் ர்மயர், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், எவின் லூயிஸ், ஆஷ்லி நர்ஸ், கீமோ பால், ரோவ்மன் பாவெல், கெமார் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஓஷேன் தாமஸ்.டி20 அணி: கார்லோஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷிம்ரோன் ஹெட்மயர், எவின் லூயிஸ், ஒபெத் மெக்காய், ஆஷ்லி நர்ஸ், கீமோ பால், கேரி பியர்ரி, கியரன் போலார்டு, ரோவ்மன் பாவெல், தினேஷ் ராம்தின், ஆந்த்ரே ரஸ்ஸல், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஓஷேன் தாமஸ்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>