×

முதல்வர், துணை முதல்வர் குறித்து அவதூறு பேச்சு டிடிவி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது புகார்

சென்னை: முதல்வர், துணை முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக, டிடிவி.ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான வெற்றிவேல் மீது, சென்னை ேபாலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை, டிடிவி.தினகரன் ஆதவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான வெற்றிவேல் தகாத வார்த்தைகளிலும், ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசியுள்ளார். இதை பார்த்து மனவேதனை ஏற்பட்டுள்ளது. எனவே, புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஊடகத்தின் முன்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவதூறு வழக்கு தொடருவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெற்றிவேல் உருவபொம்மை எரிப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடந்த 6ம் தேதி ஒருமையிலும், தரக்குறைவாக வெற்றிவேல் பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து, சென்னை கொளத்தூர் அதிமுக பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 30க்கு மேற்பட்டோர், பெரவள்ளூர் அகரம் சந்திப்பில் நேற்று காலை ஊர்வலமாக சென்று, வெற்றிவேல் உருவ பொம்மையை செருப்பால் அடித்து, தீ வைத்து எரித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களை தடுத்து நிறுத்தி, உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர், அங்கிருந்து அனைவரையும் கலைய செய்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Deputy Chief Minister ,supporter ,Dinakaran ,Vijayawale ,DVP , The Chief Minister,Deputy Chief Minister,complained , DVP Dinakaran,supporter, Vijayawale
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு