×

ஆர்எஸ்எஸ்.சை சங்பரிவார் என அழைப்பது தவறானது: ராகுல் காந்தி விளக்கம்

புதுடெல்லி: ‘ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களை சங்பரிவார் என்று கூறுவது தவறு,’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், ‘சங் பரிவார் என்றால் குடும்பம் என்று அர்த்தம். குடும்பத்தில் பெண்கள் இருப்பார்கள், வயதில் மூத்த பெரியவர்கள் இருப்பார்கள். அன்பு, இரக்கம், மரியாதை போன்றவை குடும்பத்தில் இருக்கும். ஆனால், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடம் இந்த குணங்கள் எதுவுமே இல்லை. எனவே, இனி அவர்களை சங் பரிவார் என்று அழைக்க வேண்டியதில்லை,’ என்று கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டதாக ரயிலில் இருந்து பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கி விட்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவே, ‘பெண்களை மதிக்காத ஆர்எஸ்எஸ்,’ என்ற அர்த்தத்தில் ராகுல் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்….

The post ஆர்எஸ்எஸ்.சை சங்பரிவார் என அழைப்பது தவறானது: ராகுல் காந்தி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : RSS ,Sangh Parivar ,Rahul Gandhi ,New Delhi ,Dinakaran ,
× RELATED உங்கள் வாக்கு ஜனநாயகத்தை...