×

கோவையில் அதிரடி: பறக்கும் படை சோதனையில் 3 கிலோ தங்கம், சிக்கியது

கோவை: கோவை ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ரோட்டில், சிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மதியம் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில் 3.2 கிலோ எடையில் தங்க கட்டிகள் இருந்தது. விசாரணையில், கோவையில் உள்ள பிரபல நகைக்கடைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு எந்தவிதமான ஆவணங்களும் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த தங்க கட்டிகள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.‌சேலம் 3 ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு, பள்ளப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர். காருக்குள் 311 கிலோ எடையில் வெள்ளி கொலுசுகள் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படையினரை வரவழைத்து, போலீசார் ஒப்படைத்தனர்.₹74 லட்சம் பறிமுதல்: ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை குழுவினர் ரெகுநாதபுரம் நான்கு முனை சந்திப்பில், நேற்று முன்தினம் இரவு நடத்திய வாகன சோதனையில் வேனில் ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்….

The post கோவையில் அதிரடி: பறக்கும் படை சோதனையில் 3 கிலோ தங்கம், சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Nanjundapuram road ,Ramanathapuram ,Singhanallur ,
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...