×

ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

சென்னை: தனியார் சுயநிதி ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி இயக்ககம் அறிக்கை: தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு பிரிவில் 2020-21 கல்வி ஆண்டுக்கான மாணவ சேர்க்கை நடத்த்தப்பட உள்ளது.அதன்படி B.S.M.S / B.A.M.S / B.H.M.S உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கும் M.D (Homoeopathy) உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கும் மாணவ சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இளங்கலை படிப்புகளை தேர்ந்தெடுக்க விரும்புவர்கள் ப்ளஸ் 2 முடித்து 2020 நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை படிக்க விரும்புவர்கள் AIAPGET – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். www.tnhealth.tn.gov.in என்ற இணையதளம் சென்று வரும் 10ம் தேதி முதல் விண்ணப்பகட்டணமாக ரூ1000 ஐ செலுத்தி விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து \\” The Secretary, Selection Committee, Directorate of Indian Medicine and Homoeopathy, Arignar Anna Govt. Hospital of Indian  Medicine Campus, Arumbakkam, Chennai – 600016 என்ற முகவரிக்கு வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலதிக விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளம் சென்று வழிகாட்டுதல் பெறலாம்….

The post ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Homeopathic Medical Colleges ,CHENNAI ,India ,Homeopathic Medical College ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...