×

அரூர் பகுதியில் முள்ளங்கி விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை..!

அரூர்: அரூர் பகுதியில் முள்ளங்கி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அரூர், கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், பொம்மிடி, காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, சப்பாணிப்பட்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும், 1000 ஏக்கரில் விவசாயிகள் முள்ளங்கி பயிரிட்டுள்ளனர். 2 மாத பயிரான முள்ளங்கி பயிரிட ஏக்கருக்கு ரூ.18ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது முள்ளங்கி அறுவடை சீசன் என்பதால், வரத்து அதிகரித்துள்ளது. மொத்த விலையில் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.100க்கு வாங்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ.2 முதல் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அறுவடை சீசன் என்பதால் மொத்த வியாபாரிகள் நிலத்தில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இது குறித்து விவசாயி கூறுகையில், தேவைக்கு அதிகமாவே முள்ளங்கி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். ஏக்கருக்கு ரூ.18 ஆயிரம் வரை செலவாகிறது.  ஒரு ஏக்கருக்கு, முள்ளங்கி ரூ.5ஆயிரம் கொடுத்தது வாங்குவதற்குக்கூட வியாபாரிகளா வருவதில்லை என்றனர். சில்லறையில் ஒரு கிலோ ரூ.4 முதல் விற்பனை செய்யப்படுகிறது….

The post அரூர் பகுதியில் முள்ளங்கி விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை..! appeared first on Dinakaran.

Tags : Arur ,Darmapuri district ,Kadathur ,Kambainallur ,Morapur ,Dinakaran ,
× RELATED டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி