×

திருச்சி கொள்ளிடம் புதிய பாலத்தின் தூண்களில் மண் அரிப்பு : 24 தூண்களில்7 தூண்கள் வலுவிழந்தன

திருச்சி: அண்மையில் ஏற்பட்ட மண் அரிப்பினால் திருச்சி கொள்ளிடம் புதிய பாலத்தின் தூண்கள் வலுவிழந்து காணப்படுகிறது. பாலத்தில் மொத்தம் உள்ள 24 தூண்களில் 7 தூண்கள் வலுவில்லாமல் இருப்பதாகவும் இதனை உடனே கண்காணித்து சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் மேட்டூரிலிருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட போது கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இதனால் திருச்சியில் இரண்டு பாலங்களில் உடைப்பு ஏற்பட்டது. முதலாவதாக கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலத்தில் 3 தூண்கள் இடிந்து விழுந்தது.

அதைபோல் அடுத்ததாக முக்கொம்பு மேலணையில் உள்ள 9 மதகுகள் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றின் புதிய பாலமானது 2012-ம் ஆண்டு திட்டமிடப்பட்டு 2016-ம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. மொத்தம் 24 தூண்களை கொண்ட இந்த பாலத்தில் 23லிருந்து 17 வரை உள்ள தூண்கள் தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. மேலும் மண் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்க்கு வெள்ளத்தில் வந்த அதிகப்படியான நீர் ஒரு காரணம் என்றாலும், தொடர்ந்து இந்த பகுதியில் மண் எடுக்கப்படுவதால் தான் மண் அரிப்பானது ஏற்பட்டிருக்கிறதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trichy Kollidam, new bridge, pillar, soil erosion
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்