×

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: சீரம் நிறுவனத்தின் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி ஏற்றுமதி திடீர் நிறுத்தம்..!!

டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ள நிலையில், சீரம் நிறுவனம் தயாரித்து வரும் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக வரும் 1ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. மாநிலங்கள் நேரடியாக கொரோனா தடுப்பூசியை வாங்க அனுமதி வழங்கப்படாத நிலையில் கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை கேட்டு வலியுறுத்தி வருகின்றன. மேலும் இந்தியாவில் வரும் வாரங்களில் தடுப்பூசிக்கான உள்நாட்டு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ள நிலையில், தற்போது சீரம் நிறுவனம் தயாரித்து வரும் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பொருளாதாரத்தில் நலிந்துள்ள 64 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்து நிலைமை சீரடையும் வரை தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்துகளை கூடிய விரைவில் அனுப்பி வைக்க இந்திய அரசுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பிரித்தானியா, பிரேசில், சவுதி அரேபியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய மில்லியன் கணக்கான ஆஸ்ட்ராஜெனிகா டோஸ்களை நிறுத்தி வைத்துள்ளது. இந்த தற்காலிக ஏற்றுமதி நிறுத்தம் ஏப்ரல் இறுதிவரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. …

The post இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: சீரம் நிறுவனத்தின் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி ஏற்றுமதி திடீர் நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : India ,Astragenica ,Delhi ,central government ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...