×

தமிழக - கேரளா எல்லையான புளியரை சோதனை சாவடி வழியாக போக்குவரத்து தொடங்கியது

புளியரை: தமிழக - கேரளா எல்லைவழியாக 9 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து தொடங்கியது. மழை வெள்ளம் காரணமாக கேரளம் பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் சாலைகளும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டது. செங்கோட்டை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச் செல்வது வழக்கமாக இருந்த நிலையில், சாலைகளில் மரங்கள் விழுந்ததாலும் மண் சரிவு ஏற்பட்டதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 15ம் தேதி முதல் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளா செல்லும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இரண்டு மாநில மக்களும் இதனால் அவதிக்குள்ளாயினர். சாலையை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு சாலைகள் பழுது நீக்கப்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து தொடங்கியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Puliyarai check post
× RELATED நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்...