×

அதிமுக திட்டங்கள் நிறைவேற்றப்படும்: ஜான்பாண்டியன் வாக்குசேகரிப்பு

சென்னை: எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் போட்டியிடுகிறார். இவர் கடந்த ஒரு வாரமாக அந்த தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று  பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்து வருகிறார். அதன்படி நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் 58வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்தே சென்று மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவர் செல்லும் வழியெங்கும் பெண்கள்   உற்சாக வரவேற்று, மலர்தூவி, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். அப்போது, ஜான்பாண்டியன் மக்களிடையே பேசுகையில், ‘அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான அனைவருக்கும் வீடு, பேருந்தில் பயணிக்கும் மகளிருக்கு சலுகைகள், அனைவருக்கும் விலையில்லா 6 சிலிண்டர்கள், அனைவருக்கும் சூரிய  சக்தி சமையல் அடுப்பு, வாஷிங் மிஷன், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்கள் வழங்கப்படும் போன்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். அதிமுக வெற்றி பெற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் தொகுதி மக்களுக்கு பெற்று தருவேன். தொகுதி மக்களின் அடிப்படை பிரச்னையை தீர்த்து வைப்பேன்,’ என்றார்….

The post அதிமுக திட்டங்கள் நிறைவேற்றப்படும்: ஜான்பாண்டியன் வாக்குசேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Janpandian ,Chennai ,Tamil Nadu People's Progress Association ,TPP ,Pep. Zhanbandian ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...