×

கோவையில் உள்ள சென்ட்ரல் வங்கி கிளையில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி: வங்கி மூடல்

கோவை: கோவை மாவட்டத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் தொற்று குறைந்ததாலும் ஊரடங்கில் கொடுத்த தளர்வுகளாலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக 50-க்கும் குறைவாக பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த வார கடைசியில் இருந்து மெல்ல, மெல்ல உயர தொடங்கியுள்ளது. கோவை அவினாசி சாலையில் உள்ள சென்ட்ரல் வங்கி கிளையில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானது. ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவினாசி சாலை சென்ட்ரல் வாங்கி தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து வங்கியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. வங்கி மூடப்பட்டதை அடுத்து அவசர தேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் வங்கி கிளையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது….

The post கோவையில் உள்ள சென்ட்ரல் வங்கி கிளையில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி: வங்கி மூடல் appeared first on Dinakaran.

Tags : Corona ,Central Bank ,Cova ,Govai: ,Corona epidemic ,Govai district ,Central Bank Branch ,Temple ,Dinakaran ,
× RELATED ஜூலை 1 முதல் ரயில்களின் நம்பர்கள்...