×

கொளுத்தும் கோடை வெயில் கரும்புச்சாறு விற்பனை அதிகரிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கோடை வெயிலின் தாக்கத்தால் கரும்புச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது.திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை வெயில் மார்ச், ஏப்ரல், மே மூன்று மாதங்களில் சுட்டெரித்து மக்கள் வெளியில் செல்லாத அளவு அதன் தாக்கம் இருக்கும். தற்போது தேர்தல் நேரம் என்பதால் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கரும்புச்சாறு விற்பனையும் அதிகரித்துள்ளது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், திருச்சி ரோடு, பழனி ரோடு, காட்டாஸ்பத்திரி போன்ற பகுதிகளில் சாலையோரத்தில் கரும்புச்சாறு விற்பனை செய்கின்றனர். ரோட்டில் நடந்து செல்லும் பாதசாரிகள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர், தாகம் தீர்க்க கரும்புச்சாறு வாங்கி குடிக்கின்றனர்.இதுகுறித்து கடை உரிமையாளர் சுரேஷ் கூறுகையில், கோடை காலத்தில் தாகம் தீர்க்க மட்டும் இல்லாமல் ஆரோக்கியமான பானமாக கரும்புச்சாறு உள்ளது. இதனால் மக்கள் விரும்பி குடிக்கின்றனர். கரும்புச்சாறு விற்பனை 5 மாதம் சிறப்பாக இருக்கும். ஒரு டம்ளர் கரும்புச்சாறு ரூ.15 மற்றும் 20க்கும் விற்பனை செய்கிறோம். கரும்புச்சாறுக்கு தேவையான கரும்புகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம் என்றார்….

The post கொளுத்தும் கோடை வெயில் கரும்புச்சாறு விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindukkal ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு