×

கேரள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற 1.10 போலி வாக்காளர்களை உருவாக்கிய ஆளும் கட்சி : ஆதாரங்களை வெளியிட்ட எதிர்கட்சி தலைவர்!!

திருவனந்தபுரம் : கேரளாவில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற மொத்தம் 1.10 போலி வாக்காளர்களை ஆளும் கட்சி உருவாக்கி உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கானூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா, வேறு வேறு தொகுதிகளில் வாக்குகள் உள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டார். அதன்படி மொத்தம் உள்ள 140 தொகுதிகளிலும் 1க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குகள் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 1,09, 693 என்று அவர் கூறியுள்ளார். இவர்கள் அனைவருக்கும் வாக்காளர்கள் அடையாள அட்டைகளும் விநியோகம் செய்யப்பட்டு இருப்பது எப்படி என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே மாநிலம் முழுவதும் 4 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். என்றாலும் இரட்டை வாக்குகள் மூலம் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது தங்களுக்கு கிடைத்துள்ள போலி வாக்காளர்கள் பட்டியல் ஆதாரத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய போவதாக ரமேஷ் தெரிவித்துள்ளார்….

The post கேரள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற 1.10 போலி வாக்காளர்களை உருவாக்கிய ஆளும் கட்சி : ஆதாரங்களை வெளியிட்ட எதிர்கட்சி தலைவர்!! appeared first on Dinakaran.

Tags : Ruling party ,Kerala assembly election ,Thiruvananthapuram ,ruling ,Kerala ,Kerala assembly elections ,Dinakaran ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!