×

பேட்ஸ்மன்களின் பொறுப்பற்ற ஆட்டமே தோல்விக்கு காரணம்: கேப்டன் கோஹ்லி அப்சட்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் படுதோல்வி அடைந்ததற்கு பேட்ஸ்மன்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:  லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறித்து பெருமை கொள்ள முடியவில்லை. முக்கியமாக அங்கு வானிலை கணிக்க முடியாத அளவுக்கு மாறிக்கொண்டே இருந்ததால் வியூகம் வகுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இங்கிலாந்து வீரர்கள் விட்டுக் கொடுக்காமல் முழு திறனை வெளிப்படுத்தி விளையாடியதால் வெற்றி அவர்களுக்கே உரித்தானது. முதுகு வலி காரணமாக தன்னால் சரியாக விளையாட முடியவில்லை. அடுத்த டெஸ்ட் போட்டிக்கு இன்னும் 5 நாட்கள் இருப்பதால் அதற்குள் உடல்நிலை சீராகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏன் 5-வதாக களமிறங்கினார் கோஹ்லி?
இதுவரை விராட் கோஹ்லி இந்தத் தொடரில் 4வது விக்கெட்டுக்கு தான் களமிறங்கி வந்தார். ஆனால், நேற்று 2-வது இன்னிங்சில் கோஹ்லிக்கு பதிலாக ரகானே களமிறங்கினார். இதற்கு காரணம், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடிய போது களத்தில் கோஹ்லி 37 நிமிடங்கள் இல்லை. அதனால், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சில் 37 நிமிடங்களுக்கு பிறகு தான் களமிறங்க முடியும். ஒரு வேளை அதற்குள் விக்கெட்கள் விழாமல் இருந்திருந்தால், விராட் கோலி வழக்கம் போல் 4வது வீரராகவே களமிறங்கி இருப்பார். ஆனால், முரளி விஜய், கே.எல்.ராகுல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால், ரகானே முன்னதாக களமிறங்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : England, India, Kohli, Test match, London
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...