×

உடுப்பி மாவட்டத்தில் ஒரே நாளில் 170 பேருக்கு தொற்று: எம்ஐடியில் மட்டும் 145 மாணவர்கள் பாதிப்பு

உடுப்பி: உடுப்பி மாவட்டத்தில் மணிப்பால் இன்ஸ்டிடியூட்டில் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மாவட்டத்தில் ஒரே நாளில் 300 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடுப்பி மாவட்டம் மணிப்பால் இன்ஸ்டிடியூட்டில், கடந்த வாரம் மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மணிப்பால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மணிப்பால் பொதுமருத்துவமனை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட்டது. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதித்தோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 300ஐ தொட்டுள்ளது. ேமலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சுகாதாரத்துறை மூலம் தகவல் தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை ஒரு நாளில் மட்டும் உடுப்பி மாவட்டத்தில் 170 பேருக்கு தொற்று பாதித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 145 பேர் மணிப்பாலை சேர்ந்தவர்கள். தொற்று பாதிக்காதவர்கள் மட்டுமே வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். எம்ஐடி வளாகத்தில் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாள் தோறும் எடுக்கப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. சுகாதாரதுறை தங்களின் பணிகளை துரிதமாக முடிக்க திட்டமிட்டு அதன்படி செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் அனைத்து எல்லை பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்….

The post உடுப்பி மாவட்டத்தில் ஒரே நாளில் 170 பேருக்கு தொற்று: எம்ஐடியில் மட்டும் 145 மாணவர்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Udupi district ,MIT ,Udupi ,Manipal Institute ,Dinakaran ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு