×

குப்பை கிடங்கு அகற்றப்படும்: பிரபாகர்ராஜா வாக்குறுதி

சென்னை: விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஏ.வி.எம்.பிரபாகர் ராஜா நேற்று கலைஞர் தெற்கு பகுதி 138வது வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  நடந்தே வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பிரசாரத்தின் போது பிரபாகர் ராஜா பேசுகையில், ‘இப்பகுதியில் மழைக்காலங்களில் வீடுகளை வெள்ளநீர் சூழ்வதால், அடையாறு ஆற்றங்கரையை ஒட்டி தடுப்புச்சுவர் அமைத்து கொடுக்கப்படும். பழுதடைந்த மின் கம்பங்கள் சரி செய்து தரப்படும். கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுக்கப்படும். எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கு அகற்றப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றப்படும். இதுபோன்ற பணிகளை செய்து தருவேன். திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து அறிவிப்புகளும், திட்டங்களும் விருகம்பாக்கம் தொகுதியில் விரைந்து செயல்படுத்துவேன். மக்களின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். பிரசாரத்தின்போது பகுதி செயலாளர் கே.கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ.துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி, வட்ட செயலாளர் செந்தில்குமார், பி.கே.குமார்,  பூக்கடை பழனிச்சாமி,  ராமமூர்த்தி,  பாரி நகர் சசி, கருப்புசாமி, விநாயகம், மகேந்திரன் சி.எச்.தினேஷ், தஞ்சை ராஜா மேகநாதன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். …

The post குப்பை கிடங்கு அகற்றப்படும்: பிரபாகர்ராஜா வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Prabhakarraja ,Chennai ,Virugambakkam ,DMK ,AVM ,Prabhakar Raja ,Kalinar South region ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...