×

வேலூர் கொசப்பேட்டையில் சுகாதார சீர்கேடு பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து தூர்ந்து போன கழிவுநீர் கானாறு-ஓட்டல், மருத்துவக்கழிவுகள் குவிகிறது

வேலூர் : வேலூர் நகரில் மலையில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தூய்மையான மழைநீரையும், ஊற்று நீரையும் சுமந்து வந்த கானாறுகள் இன்று கழிவுநீர் கால்வாய்களாக பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், 60 முதல் 100 அடி வரை அகலம் கொண்ட கானாறுகள் 4 அடி முதல் 10 அடி அகல கால்வாய்களாக ஆக்கிரமிப்பாளர்களால் உருமாறிப்போயுள்ளன. இத்தகைய ஆக்கிரமிப்புகளை பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி அமைப்புகளும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளவில்லை. இது ஒருபுறம் என்றால் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மோகோல் கழிவுகள், கண்ணாடி கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகளை கொட்டுவது மட்டுமின்றி, வீட்டின் குப்பைகூளங்களும் அளவின்றி கொட்டப்பட்டு தூர்ந்து போயுள்ளன. குறிப்பாக வேலூர் சலவன்பேட்டை மலையில் இருந்து  வரும் மழைநீர் கானாறு சலவன்பேட்டையை நெருங்கியதுமே கழிவுநீரையும், குப்பை  கூளங்களையும் தாங்கி சுமந்து கொண்டு, கோட்டை சுற்றுச்சாலையில் நிக்கல்சன் கால்வாயுடன் இணையும் கழிவுநீர் கானாற்றில் அப்பகுதிகளை சேர்ந்த தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் ஆகியன ஒட்டுமொத்தமாக மக்காக குப்பைகளை கொட்டி தூர்ந்து போக வைத்துள்ளன. இதனால் சிறிது மழை பெய்தாலும், கானாற்றை ஒட்டியுள்ள அனைத்து தெருக்களும் கழிவுநீரால் சூழப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. மழைக்காலங்கள் மட்டுமின்றி அனைத்து பருவக்காலங்களிலும் இந்த கானாற்றால் இப்பகுதி மக்கள் துர்நாற்றம் மட்டுமின்றி சுகாதார சீர்கேட்டின் பிடியிலும் சிக்கி தவிக்கின்றனர். எனவே, இந்த கானாற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் கட்டிடங்களையும், பிற ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, கானாற்றை முழுமையாக தூர்வார வேண்டும்.  மீண்டும் அங்கு ஆக்கிரமிப்புகள் வராத வகையிலும் கானாற்றில் மக்கா குப்பைகளை கொட்டாத வகையிலும் மூடி அதை வீதியாக மாற்றினால் ஜிபிஎச் ரோடில் தேவையில்லாமல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க முடியும் என்பது அப்பகுதி மக்களின் கருத்து….

The post வேலூர் கொசப்பேட்டையில் சுகாதார சீர்கேடு பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து தூர்ந்து போன கழிவுநீர் கானாறு-ஓட்டல், மருத்துவக்கழிவுகள் குவிகிறது appeared first on Dinakaran.

Tags : Vellore ,Kosappettai ,Vellore Kosappettai ,Dinakaran ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...