×

நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்து

நாட்றம்பள்ளி : திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா, கே.பந்தாரப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட அரசனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சென்னகேசவன்(67). இவர் வீட்டிற்கு புதியதாக காஸ் இணைப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில், நேற்று காஸ் ரெகுலேட்டரை பொறுத்தி காஸ் பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென வீடு முழுவதும் காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, காஸ் வைக்கப்பட்டுள்ள அறையின் கதவு, அங்கிருந்த துணிமனிகள் உள்ளிட்டவை மீது தீ பரவி எரிந்தது. இதனை பார்த்த சென்னகேசவன் அங்கிருந்த தப்பி வெளியே ஓடி வந்து அலறி கூச்சலிட்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் நாட்றம்பள்ளி தீயணைப்புத்துறைக்கு தகவல் ெதரிவித்துவிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தகவலறிந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்புத்துறையினருக்கு சம்பவ இடத்திற்கு விzந்து வந்து தீயை அணைத்து மேலும், தீ பரவாமல் தடுத்தனர். மேலும், பாதுகாப்பாக காஸ் சிலிண்டரை அகற்றினர். …

The post நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Nadrampalli ,Nattrampalli ,Chennakesavan ,Arasanapalli ,K. Bandharapalli panchayat ,Nattrampalli taluk ,Tirupathur district ,Dinakaran ,
× RELATED புதுப்பேட்டை அரசு மேல்நிலைப்...