×

ஹீரோ, ஹீரோயின் முதல் பாடலாசிரியர் வரை கோதாவில் குதிக்கும் கோலிவுட் ஸ்டார்ஸ்

சினிமா, அரசியல் இரண்டும் வெவ்வேறு களம் என்றாலும், வெற்றி, தோல்வி என்ற ஒரு விஷயம் பொதுவானது. தமிழ் திரையுலகத்திற்கும், அரசியலுக்கும் உள்ள நெருக்கம் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் என பல்லாண்டுகளாக தொடர்கிறது. இரண்டிலும் பலர் இறங்கினாலும், திரையிலும், அரசியலிலும் பிரகாசித்தவர்கள் சிலர், பின்வாங்கியவர்கள் பலர். அந்த வரிசையில் திரையில் ஜொலித்த நட்சத்திரங்கள், தற்போது வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில், விசேஷம் என்னவென்றால் தமிழக அரசியலில் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர், தயாரிப்பாளர், காமெடியன், வில்லன், பாடலாசிரியர் என ஒரு திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் போட்டியிடுவது மிக ஆச்சரியமான ஒன்று. அவர்களை பற்றி பார்க்கலாமா?கமல்ஹாசன் எம்ஜிஆர், சிவாஜிக்கு பின், அரசியலுக்கு வரும் முன்னணி ஹீரோ. 60 ஆண்டுகளாக திரைத்துறையில் உள்ளார். 2018, பிப். 21ம் தேதி ‘‘மக்கள் நீதி மய்யம்’’ என்ற பெயரில், மதுரையில் அரசியல் கட்சியை தொடங்கினார். 2019 நாடாளுமன்ற தேர்தலில், தனது கட்சி வேட்பாளர்களை களமிறக்கினார். வரும் சட்டமன்ற தேர்தலில் ேகாவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மய்யம் தேர்தலில் என்ன செய்யும் என்பதை வாக்காளர்களே தீர்மானிப்பார்கள்.சீமான் ‘பாஞ்சாலங்குறிச்சி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சீமான். தொடர்ந்து சில படங்கள் இயக்கியவர், பின்னர் நாம் தமிழர் கட்சியை துவக்கினார். 234 தொகுதிகளில், சரி பாதியாக பெண்களுக்கு சீட் ஒதுக்கி கொடுத்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறியவர், தற்போது திருவொற்றியூர் தொகுதியில் நிற்கிறார். குஷ்பு90களில் முன்னணி ஹீரோயினாக, ரசிகர்கள் கோயில் கட்டும் அளவுக்கு திரையுலக பிரபலமாக திகழ்ந்தவர் குஷ்பூ. ஆனால், அரசியலில் நிலையான இடத்தை பிடிக்க தடுமாறி வருகிறார். திமுக, காங்கிரஸ், பாஜ என ஒவ்வொரு சீசனுக்கு கட்சி மாறி வரும் இவர், தற்போது பாஜ சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். (வெற்றி, தோல்விக்கு பிறகு கட்சி மாறினால் கம்பெனி பொறுப்பல்ல).சினேகன்மண் வாசனை வீசும் பாடல்களை எழுதும் கவிஞர். ‘‘வெள்ளாவி விட்டுத்தான் வெளுத்தாங்களா…’’ என கவிதைத்தனமும் கொட்டுவார். ‘‘புள்ளைக்குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா’’ என எழுதி சர்ச்சையிலும் சிக்குவார். தற்போது மநீம சார்பில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில்  போட்டியிடுகிறார். ‘‘என்னை போட்டியிடக்கூடாதென ரூ.10 கோடி விலை பேசினார்கள்’’ என பேசி மிரள வைத்தார். மீம்ஸ் பார்ட்டிகளுக்கு தீனியும் போட்டார்.ப்ரியாரஜினி, கமல் கொடி கட்டிப்பறந்த காலத்தில், அவர்களுடன் அதிக படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ப்ரியா. ‘‘தென்னகத்து ஜீனத் அமன்’’ என அழைக்கப்பட்டவர். சிறிது காலம் இயக்குநராகவும் வலம் வந்தார். துணிச்சலான பேச்சுக்கு பெயர் போனவர். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை, மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மயில்சாமி25 ஆண்டுகளாக காமெடி நடிகராக வலம் வருபவர் மயில்சாமி.  ‘‘திருப்பதியில சந்திரபாபு நாயுடு லட்டுக்கு பதில் ஜாங்கிரி கொடுக்க சொல்லியிருக்காரு…’’ என்ற இவரது காமெடி இப்போதும் பிரபலம். அதிமுகவில் இருந்தவர், ஜெயலலிதா மரணத்துக்கு பின் கட்சியிலிருந்து வெளியேறி விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.போட்டியிலிருந்து விலகிய நட்சத்திரங்கள்பாஜ சார்பில் ராஜபாளையம் தொகுதியில் நடிகை கவுதமி போட்டியிடுவார் என தேர்தல் தேதி வெளியிடுவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டார். ஆனால், சீட் கிடைக்கவில்லை. இதேபோல் கமலின் மநீம கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள, சமக தலைவரும் நடிகருமான சரத்குமார், முதன்மை துணைப்பொதுச்செயலாளரும் நடிகையுமான ராதிகா போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருவரும் பிரசாரத்துல பிஸியா இருக்கிறோம். போட்டியிடவில்லை என சைஸாக நழுவி விட்டனர். உடல்நலக்குறைவு காரணமாக, முன்னணி நடிகரான விஜயகாந்த்தும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை….

The post ஹீரோ, ஹீரோயின் முதல் பாடலாசிரியர் வரை கோதாவில் குதிக்கும் கோலிவுட் ஸ்டார்ஸ் appeared first on Dinakaran.

Tags : Kollywood ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்