×

தூத்துக்குடியில் காக்கை, குருவிகளை போல் 13 பேரை சுட்டுக் கொன்றது அதிமுக ஆட்சி.. சாத்தான்குளம் தந்தை மகனையும் கொலை செய்தது : மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் மத்தியில் இருக்கும் பா.ஜ., மாநிலத்தில் இருக்கும் அதிமுக நடத்திய பச்சை படுகொலை என தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன், திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், கோவில்பட்டி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சீனிவாசன் ஆகியோரை ஆதரித்துமு.க.ஸ்டாலின் பேசியதாவது:-’50 ஆண்டு கால என் அரசியல் வாழ்க்கையில் பல்வேறு பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறேன். 14 வயதில் கோபாலபுரம் பகுதியின் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இளைஞரணி செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், கருணாநிதி உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருந்த போது செயல் தலைவர், அவரது மறைவிற்கு பின்னர் உங்களையெல்லாம் கட்டிக் காட்டக் கூடிய திமுக தலைவர் பொறுப்பில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.இன்று எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நாளை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கொளத்தூர் தொகுதி வேட்பாளர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெற்றால் தான் முதலமைச்சர் என்ற முதல்வர் வேட்பாளராகவும் உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றனர். அந்த கண்ணீர் இன்றும் மறையவில்லை. காக்கை, குருவிகளை சுட்டுத் தள்ளுவது போன்று சுட்டுத் தள்ளினர். ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற அமைதி வழியில், அறவழியில், காந்திய வழியில் மக்கள் போராடினர். அந்தப் போராட்டத்தில் 100 நாட்கள் கடந்ததையடுத்து 2018ம் ஆண்டு மே 22ம் தேதி கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக அமைதி வழியில் குடும்பம், குடும்பமாக ஊர்வலம் நடத்தினர்.அப்போது இருந்த மாவட்ட கலெக்டர், கலெக்டர் அலுவலகத்திலிருந்து மனுவை வாங்கியிருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது. ஆனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வராமல் வெளியூர் சென்றுவிட்டார். இதை பயன்படுத்திக் கொண்டு திட்டமிட்டு மத்தியில் இருக்கும் பா.ஜ. அரசும், மாநிலத்தில் இருக்கும் அதிமுக அரசும் பயங்கரமான துப்பாக்கிச்சூடு நடத்தியது.மத்தியில் இருக்கும் பா.ஜ.வுடன் மாநிலத்தில் இருக்கும் அதிமுக இணைந்து கொண்டு நடத்திய பச்சை படுகொலை தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.இப்படி பாவத்தை செய்த ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டாமா? என்பதைத் தான் நான் கேட்கிறேன்.இந்த சம்பவம் குறித்து முதல்வர் பழனிச்சாமியை பார்த்து செய்தியாளர்கள் கேட்டதற்கு டி..வி.யில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்றார் முதல்வர் பழனிச்சாமி. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு அரசு வேலை வழங்குவேன் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். ஆனால் பட்டதாரிகளுக்கு தகுதியற்ற வேலையை வழங்கியுள்ளார். எனவே நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களுக்கு தகுதிக்குரிய வேலை வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்கிறேன்.சாத்தான்குளம் காவல்நிலையத்தில் லாக்அப்பில் நடந்த சம்பவம் கொடூரம். ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தை, மகன் இருவரையும் அடித்தே கொன்றுவிட்டார்கள். எனது அண்ணனுக்கு ெநஞ்சில் இருந்த முடிகள் முழுவதையும் பிடுங்கிவிட்டார்கள் என அவரது சகோதரி கதறியதை சமூக வலைதளங்களில் பார்த்தோம். வீட்டில் இருந்து லுங்கியும், சட்டையும் கொடுத்தோம். அவ்வளவு ரத்தம் என அந்தத் தாய் கதறியதை பார்த்தோம். இந்த சம்பவத்தை அறிந்தவுடன் நமது மாவட்டச் செயலாளரிடம் போனில் பேசி அனுப்பி வைத்தேன். அவர்கள் இருவரும் இறந்த செய்தி நமக்கு கிடைத்தது. அதற்கு முதல்வர் பழனிச்சாமி அவர்களுக்கு ஏற்கனவே நோய் இருந்தது. மூச்சுத்திணறி இறந்துவிட்டனர் என சொன்னார். மேலும் போலீசார் கடையை மூடக் கூறியபோது தந்தையும், மகனும் ரோட்டில் படுத்து உருண்டனர். அதுதான் சாவுக்கு காரணம் என்றார். அப்படித்தான் வழக்கு போடப்பட்டது.அப்போது எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இதை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றேன். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தான் இறந்தார். அதற்கு விசாரணைக்கு உத்தரவிடும்போது இந்த சம்பவத்திற்கு உத்தரவிட முடியாதா?இவ்வாறு அவர் பேசினார்….

The post தூத்துக்குடியில் காக்கை, குருவிகளை போல் 13 பேரை சுட்டுக் கொன்றது அதிமுக ஆட்சி.. சாத்தான்குளம் தந்தை மகனையும் கொலை செய்தது : மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Crow ,Thutukudi ,Satankulam ,G.K. Stalin ,Thoothukudi ,J.A. ,Thuthaludi ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்