×

சரிவான சாலை பகுதியை சீரமைக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கின்றது. தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகள், லாரிகள், கார்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் சென்று வருகின்றன. இந்நிலையில் பல ஆண்டுகளாக குறுக்கு ரோடு பகுதிக்கு வடக்கே ஒரு சரிவான பகுதியும், தெற்கே இரண்டு சரிவான பகுதிகளும் இருந்து வருகின்றன. வடகிழக்கு பருவ மழையின் போது கன மழையால் வெள்ளாற்றில் வரும் வெள்ள நீரை வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக திருப்பி விடுவது வழக்கம். அவ்வாறு விடப்படும் தண்ணீர் குமார உடைப்பு வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படும். இதில் அதிகப்படியான நீர்வரத்து உள்ள நேரங்களில் இந்த சாலை சரிவு உள்ள இடத்தின் வழியாக வெளியேறி விவசாய விளை நிலங்களில் பயிர்களை மூழ்கடித்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகின்றது. புதிய கட்டமைப்புடன் குழாய்கள் பதித்து நவீன இயந்திரங்களை கொண்டு சாலையை சமன் செய்து வடிகால் வசதி செய்து தரலாமே என சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் , பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்….

The post சரிவான சாலை பகுதியை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chettiyathopu ,Chetyathopu ,Chennai ,Kumbakonam National Highway ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்