×

8 கொலை உட்பட 28க்கும் மேற்படட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சிடி மணி துப்பாக்கிமுனையில் கைது

* சினிமாவை மிஞ்சுவது போல் வாகன சேசிங்
* சென்னை அருகே தனிப்படை அதிரடி வேட்டை
* துப்பாக்கி, கத்திகளுடன் 6 கூட்டாளிகள் சிக்கினர்

சென்னை: சினிமா காட்சிகளை மிஞ்சுவது போல் வாகனத்தில் சேசிங் செய்து பிரபல ரவுடி சிடி மணியை கூட்டாளிகள் 6 பேருடன் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) சிடி மணி (48). இவன், கடந்த 1990ல் சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் சிடி கடை நடத்தினான். புதிய படங்களின் திருட்டு வீடியோ எடுத்து விற்பனை செய்தான். பிறகு சிடி மணிக்கு திண்டுக்கல் பகுதியில் பிரபல ரவுடியாக இருந்த பெரிய மகேஷ் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சிடி மணி சிறிது காலம் திண்டுக்கலில் இருந்தான். ரவுடிகளுடனான பழக்கத்தால் ரியல் எஸ்டேட் தொழிலிலும் சிடி மணி ஈடுபட்டான். பிறகு சென்னை வந்த அவன், தென் சென்னை முழுவதும் ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு பல கோடி மதிப்புள்ள நிலங்களை அபகரித்தான். இதற்காக பல கொலை சம்பவங்களை அரங்கேற்றினான். இதனால் தென் சென்னையில் பிரபல ரவுடிகளான நாகேந்திரன் மற்றும் டாக் ரவியை எதிர்த்து தனது ரவுடி சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினான். நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளை சேர்த்து கொண்டு டான் போன்று வலம் வந்தான். இவன் மீது சென்னை உட்பட புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரபலமான ரவுடி என்று தன்னை காட்டிக்கொள்ள போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தனது ரவுடி ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினான். உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்ததால் சிடி மணியை கைது செய்வதிலும் போலீசார் தயங்கி வந்தனர்.

இதற்கிடையே, கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் மேற்கு சைதாப்ேபட்டையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெகநாதனை நாட்டு வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்ய முயன்றனர். ஆனால் ஜெகநாதன் அவர்களிடம் இருந்து தப்பி விட்டார். இந்த வழக்கில் குமரன் நகர் போலீசார் சிடி மணியை கைது செய்தனர். பிறகு அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். பின்னர் குண்டாஸ் முடிந்து வெளியே வந்த சிடி மணி போலீசாரிடம் இருந்து தலைமறைவானான்.கடந்த 23ம் தேதி மாம்பலம் பகுதியில் தொழிலதிபர் ஒருவரை சிடி மணி துப்பாக்கி முனையில் மிரட்டியதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து தென் சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை முட்டுக்காடு அருகே சிடி மணி தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கூடுதல் துணை கமிஷனர் குமார், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், கானத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்ெபக்டர் கவுதம் தலைமையிலான தனிப்படையினர் சிடி மணி பதுங்கி இருக்கும் இடத்திற்கு சென்று சுற்றி வளைத்தனர்.

இதை அறிந்த சிடி மணி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு காரில் தப்பித்து ஓடினான். உடனே தனிப்படை போலீசார் தங்களது வாகனத்தில் சினிமா காட்சிகளை போல் துரத்தி ெசன்று சிறிது தொலைவில் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து சிடி மணியை கைது செய்தனர். அவனுடன் இருந்த ரவுடிகளான அரி (எ) அரிகரன், சுரேஷ் (எ) சொறி சுரேஷ் (33), மாதவன் (34), இளங்கோவன் (36), வினோத் (எ) வினோத்குமார், சிவக்குமார் (33) ஆகிய 6 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், 6 பட்டாக்கத்திகள் வெள்ளை நிற சொகுசு கார், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டன. சிடி மணி உட்பட 7 ேபர் மீதும் கானத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சிடி மணி மீதுள்ள வழக்குகள் விவரம்
தென் சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த சிடி மணி மீது 8 கொலை வழக்குகள், 15 கொலை முயற்சி வழக்குகள், துப்பாக்கி வைத்திருந்ததாக 5 வழக்குகள் என மொத்தம் 28 வழக்குகள் உள்ளன. நான்கு முறை குறிப்பாக, கடந்த 2007, 2009, 2012, 2015ம் ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சமயபுரம் அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தை