×

ஆலடிப்பட்டி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே  ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி அன்னை யோகாம்பிகை கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை கொடியேற்றமும் ,அதனை தொடர்ந்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனம் அப்பர் சுவாமி வீதி வலமும், இரவு விநாயகர் மூசிக வாகனத்திலும்,முருகன் மயில் வாகனத்திலும் வீதிஉலாவும்,இரவு 9 மணிக்கு ஏக சிம்மாசனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா  நடந்தது. இன்று காலை சுவாமி அம்பாள் ஏக சிம்மாசனம், விநாயகர் மூசிக வாகனத்திலும்,முருகன் மயில் வாகனத்திலும் வீதி வலம் நிகழ்ச்சியும்,மதியம் அன்னதானமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி பூங்கோவில் வாகனத்திலும்,  அம்பாள் சிங்க வாகனத்தில் வானவேடிக்கையுடன் வீதி வலம் வருதல்  நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்களும் சுவாமி, அம்பாளுக்கு  சிறப்பு பூஜைகள் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 31ம் தேதி  10 ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கட்டளைதாரர் டாக்டர் ரமேஷ், கேப்டன் சாமுவேல், தொழிலதிபர் தேசிங்ராஜன், மிக்சி முருகன், ஆனந்த் அருணா உட்பட பலர் கலந்துகொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை டிரஸ்டி சௌந்திரராஜன் மற்றும்  பொதுமக்கள் செய்து வருகின்றனர்….

The post ஆலடிப்பட்டி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Panguni festival ,Aladipatti Temple ,Alankulam ,Sri Vaidyalinga Swami Annai Yogamphikai temple ,Aladippatti temple ,Dinakaran ,
× RELATED ஆலங்குளம் அருகே கோயில் கொடை விழா...