×

மாஜி உளவுத்துறை ஐஜி தலைமையில் போலீஸ் வாகனங்களில் பணம் கடத்தல்: தற்போதைய அதிகாரிகளும் உடந்தை என புகார்

சென்னை: மாஜி உளவுத்துறை ஐஜி தலைமையில் தமிழகம் முழுவதும் போலீஸ் வாகனங்களில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதற்காக பணம் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளன. கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும்  விலைவாசி ஏற்றம், பெட்ரோல், டீசல், காஸ் வரி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தொகுதிக்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை பணம் செலவு செய்ய அதிமுக தயாராகி உள்ளதாக கூறப்பட்டு வந்தது. தேர்தலுக்கு முன்னரே, மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் பணம் பதுக்கி  வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பணத்தை தற்போது வெளியில் ெகாண்டு வருவதற்கான பணிகளை மண்டல ஐஜிக்களிடம் ஆளும் கட்சி ஒப்படைத்துள்ளது. இதற்காக முன்னாள் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி தலைமையில் தனி  அணி உருவாக்கப்பட்டுள்ளதாம். தற்போது மண்டல ஐஜிக்களாக நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் அவரது ஆலோசனைப்படியே அவரது ஆதரவாளர்களாக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம்தான் தற்போது பணம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். அதில் வடக்கு மண்டலத்தில் ஒரு அமைச்சரிடம் பணம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளதாம். இதை விநியோகிக்கும் பொறுப்பு மத்திய மண்டலத்தில் ஒரு உயர் போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். இந்தப் பணத்திற்கு மேற்கு  மண்டலத்தில் உள்ள ஒரு மணியான அமைச்சர்தான் பொறுப்பாளராம். மேற்கு மண்டலத்தில் ஒரு அமைச்சரிடம் பணம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளதாம். தென் மண்டலத்தில் முக்கிய காண்ட்ராக்டர் ஒருவரிடம் பணம் கொடுத்து  வைக்கப்பட்டுள்ளதாம். இந்தப் பணத்தை மாவட்டம் வாரியாகவும், தொகுதி வாரியாகவும் கொண்டு செல்லும் பணியை தற்போது முன்னாள் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். இவர்தான், மண்டல ஐஜிக்களிடம்  பேசி, போலீஸ் வாகனங்களில் கொண்டு செல்லும் பணியை கண்காணிக்கிறாராம். இதற்காக தற்போது பணியில் உள்ள 2 டிஎஸ்பிக்களை தன்னிடம் வைத்துள்ளாராம். அவர்கள்தான் மாநிலம் முழுவதும் போலீஸ் வாகனங்களில் பணம் கொண்டு செல்வதை கண்காணிக்கிறார்களாம். கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் பணம் கொண்டு  செல்லும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறதாம். இந்தச் சம்பவத்தில் தங்களுக்கு நம்பிக்கையான அதிகாரிகளைத்தான் ஈடுபடுத்தியுள்ளார்களாம் மண்டல ஐஜிக்கள். கடந்த முறை ஆம்புலன்சில் பணம் கொண்டு சென்றனர். அதை  எதிர்க்கட்சிகள் கண்டுபிடித்து விட்டனராம். இதனால்தான் இந்த முறை போலீஸ் வாகனத்தில் கடத்துகிறார்களாம். போலீஸ் வாகனத்தை யாரும் மறிக்க மாட்டார்கள் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடாம். இந்த தகவல் வெளியான பிறகு காவல்துறையில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளதாம். மேலும் மண்டல ஐஜிக்கள், மாஜி உளவுத்துறை ஐஜியிடம் தினமும்  அன்றாட நடவடிக்கைகளை கூறி வருகிறார்களாம். இதை தற்போது பணியாற்றிவரும் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியுடன் பேசி வருகிறார்களாம்….

The post மாஜி உளவுத்துறை ஐஜி தலைமையில் போலீஸ் வாகனங்களில் பணம் கடத்தல்: தற்போதைய அதிகாரிகளும் உடந்தை என புகார் appeared first on Dinakaran.

Tags : Maji Intelligence IG ,Chennai ,Tamil Nadu ,IG ,Maji Intelligence ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...