×

இபிஎஸ்க்கு கட்-அவுட் ஓபிஎஸ்க்கு கெட்-அவுட்: ஆதரவாளர்கள் அப்செட்

மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜன் செல்லப்பா. திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம்  மேற்கொண்டு வருகிறார். பிரசார வாகனத்தில் எடப்பாடி  பழனிச்சாமி  படம் உள்ள கட்-அவுட்  மட்டும் தொண்டர்களால் எடுத்து செல்லப்படுகிறது. ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் கட்-அவுட் இல்லாதது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏற்கனவே  ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான முத்துராமலிங்கம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு சீட் கேட்டும் கிடைக்கவில்லை. எடப்பாடி ஆதரவாளரான ராஜன் செல்லப்பாவிற்கு சீட் கிடைத்ததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.  இப்போது வேட்பாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏவின் இந்த செயல், ஓபிஎஸ் ஆதரவாளர்களை மேலும் கோபமடைய செய்துள்ளதாக தொண்டர்கள் கூறுகின்றனர்….

The post இபிஎஸ்க்கு கட்-அவுட் ஓபிஎஸ்க்கு கெட்-அவுட்: ஆதரவாளர்கள் அப்செட் appeared first on Dinakaran.

Tags : Rajan Chellappa ,AIADMK ,Tiruparangunram ,Madurai ,Tiruparangunram Constituency ,Dinakaran ,
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்