×

வாலிபரை கத்தியால் தாக்கி பணம், செல்போன் பறிக்க முயற்சி: 4 2 பேர் கைது 42 பேருக்கு வலை

சென்னை: திருமங்கலம் பாடி மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஒருவர் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, அந்த  வாலிபரை வழிமறித்தது. பின்னர், திடீரென கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி, அவரிடமிருந்த செல்போன், பணத்தை தருமாறு மிரட்டியது. அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த வாலிபர், மர்ம கும்பலை சேர்ந்தவர்களிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்டார். இதனால், ஆத்திரமடைந்த அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டினர். படுகாயம் அடைந்த அவர் வலி தாங்காமல் அலறினார். அவரது அலறல் சத்தத்தைக்கேட்ட, அவ்வழியே வந்த ஆயுதப்படை  காவலர் மற்றும் பொதுமக்கள் சிலர், அந்த மர்ம கும்பலை துரத்தி, பிடிக்க முயற்சித்தனர். அவர்களில், 2 பேர் தப்பியோட, பிடிப்பட்ட 2 பேரை சராமரியாக, அடித்து, உதைத்து, திருமங்கலம் காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி(32), முத்துபாண்டி(20) என்பதும், அவர்கள் வைத்திருந்தது  பொம்மை துப்பாக்கி என்பதும் தெரிந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்தனர்.மேலும், தப்பி ஓடிய இருவரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்….

The post வாலிபரை கத்தியால் தாக்கி பணம், செல்போன் பறிக்க முயற்சி: 4 2 பேர் கைது 42 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tirumangalam Badi Membridge ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...