×

ஏரியில் மண் திருடிய 2 பேர் சிக்கினர்: பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுளாபுரம் ஊராட்சி, சின்ன ஓபளாபுரம் கிராமத்தில் 1000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி  உள்ளது. இந்த ஏரியை நம்பித்தான் காய்லர்மேடு, சின்ன ஓபுளாபுரம், ஈச்சங்காமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கால்நடை மாடுகள், பகல் நேரங்களில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு இந்த ஏரியில் நீர் அருந்தி விட்டுச்செல்வது வழக்கம்.  மேலும், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் துணி துவைக்க பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு அந்த ஏரியை ஒட்டி லாரி உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை 3 மணியளவில்  அந்நிறுவனத்தை சேர்ந்த இருவர் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் 10 அடி ஆழத்திற்கு கால்வாய் போல் செம்மண் எடுத்து தனியார் தொழிற்சாலைக்கு நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை அறிந்த சின்ன ஓபளாபுரம் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  இயந்திரம் மற்றும் இரண்டு நபர்களை சிறைபிடித்தனர். பின்பு வருவாய் துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி துணை வட்டாட்சியர் சம்பத், வருவாய் ஆய்வாளர், வைத்தியலிங்கம், கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஏரியில் திருட்டு மணல் அள்ளிய கேது(35), செல்வகுமார்(39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்….

The post ஏரியில் மண் திருடிய 2 பேர் சிக்கினர்: பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Opulapuram panchayat ,Chinna Opulapuram ,
× RELATED ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 1.5 டன் மாம்பழம் பறிமுதல்