×

ஆர்ப்பாக்கம் கிராமத்தில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள் அச்சத்துடன் செல்லும் மக்கள்

*விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் ஊராட்சியில் கொத்தங்குடி கிராமத்தில் உச்சிமேடு தெரு உள்ளது. இங்கிருந்து மயானத்துக்கு செல்லும் சாலையில் அதிக மின்னோட்டம் செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகவும் பயந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மின்கம்பிகள் தாழ்வாக தொங்குவதால் விளைநிலங்களில் இருந்து வைக்கோல் மற்றும் நெல் மூட்டைகளை தலையில் சுமந்து வருவதற்கு விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆர்ப்பாக்கம் உச்சிமேடு தெருவில் மின்கம்பிகள் மிகவும் தளர்ந்து தாழ்வாக தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் கிராம மக்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வயல்களில் வேலை செய்யும் விவசாயிகளும் அச்சத்துடன் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விபத்தை தவிர்க்கும் வகையில் தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….

The post ஆர்ப்பாக்கம் கிராமத்தில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள் அச்சத்துடன் செல்லும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Arpakkam ,Kollidam ,Arpakkam village ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் அருகே கடைவீதியில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது