×

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

சென்னை: நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர்(43). இவர், பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனசேகர் அவரது அண்ணி சுமதி என்பவருக்கு உடல்நிலை சரியில்லை. அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனசேகர் அவருடைய அன்னையை பார்க்க மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். அண்ணியை பார்த்துவிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ வின் லாக்கரை உடைத்து அதில் இருந்த 4 சவரன் நகை, ₹7 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவுகள் மூலம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்….

The post வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thanasekar ,Nedkudam ,Thansekar ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...