×

அதிமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டம்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. அதில் அவருக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கஜா (எ) கஜேந்திரன் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து நேற்று ஆதரவு திரட்டினார்.கிழக்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். அதிமுக, பாமக, பாஜ, தாமாகா, புரட்சி பாரதம் ஆகிய கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் கல்வாய், காயரம்பேடு, கருநீலம், கொண்டமங்கலம், தென்மேல்பாக்கம், அஞ்சூர், குன்னவாக்கம், பட்டரவாக்கம், சென்னேரி, வல்லம், மேலமையூர், ஆலப்பாக்கம், வீராபுரம் ஆகிய பகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் கஜா (எ) கஜேந்திரனை கூட்டணி கட்சியினர் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது அவருக்கு, பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அப்போது, வேட்பாளர் கஜேந்திரன் பேசுகையில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்தால், பொதுமக்களின் அனைத்து குறைகளையும் தமிழக முதல்வரின் நேரடி பார்வைக்கு எடுத்து சென்று உடனுக்குடன் தீர்த்து வைப்பேன் என உறுதியளித்தார்….

The post அதிமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Koodovancheri ,Chengalbatu ,Assembly Constituency ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கணினி...