×

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருமழிசை காமராஜர் தெருவை சேர்ந்தவர் கம்னூர்பாஷா. இவரது மகன் அப்பாஸ்(19). அப்பாஸ் அதே பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெற்றோரிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 18 வயது வந்ததும் திருமணம் செய்து வைப்பதாக சமாதானம் செய்து வைத்துள்ளனர். இருந்தும் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அப்பாஸ் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு யாரும் இல்லாத நேரத்தில் சென்றவர் அங்கு மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து, தகவலறிந்த வெள்ளவேடு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அப்பாஸின் உடலை  மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 18 வயது நிரம்பாத பெண்ணை காதலித்து, அந்த பெண்ணை உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என கேட்ட வாலிபரை சமாதானப்படுத்திய நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது….

The post திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Kamnoorpasha ,Kamarajar Street ,Thiruvallur ,Abbas ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்