×

அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பேன்: அசன் மவுலானா பிரசாரம்

சென்னை: திமுக கூட்டணி சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று அடையாறு பெரிய பள்ளி வாசலில் தொழுகை முடிந்து வந்தவர்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி  ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்கள் இன்னும் இன்னல்களுக்கு தான் ஆளாக்கப்படுவார்கள். எனவே இதிலிருந்து மீள காங்கிரஸ் சின்னமான கை சின்னத்தில் வாக்களியுங்கள், என்று வலியறுத்தினார். மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்களின் அடிப்படை வசதிகளை தீர்க்க முழுவீச்சில் பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்தார். மேலும் தங்கு தடையின்றி சுத்தமான குடிநீர், குப்பைகள் உடனுக்குடன் அகற்றி வேளச்சேரி தூய்மையான தொகுதியாக மாற்றப்படும். நவீன நூலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழை வெள்ள காலங்களில் தண்ணீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார். பின்னர் பெசன்ட்நகரில் வீதி வீதியாக சென்று மக்களின் குறைகளை கேட்டு அவற்றை எல்லாம் நிறைவேற்றி தர வாய்ப்பு தரும்படி உறுதியளித்தார். அவருடன், திமுக பகுதி செயலாளர்கள் சேகர், துரை கபிலன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அடையாறு துரை, மதிமுக மாவட்ட செயலாளர் கழக குமார் உட்பட ஏராளமான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் சென்று வாக்கு சேகரித்தனர். …

The post அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பேன்: அசன் மவுலானா பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Asan Maulana ,Chennai ,Congress ,Velachery ,DMK ,
× RELATED மகளிர் போலீசாரை அருவருப்பாக பேசிய...