×

வெற்றியை உறுதி செய்ய வேண்டும்: ஜான்பாண்டியன் பேச்சு

சென்னை: எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம், அதிமுகவின் வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பாலகங்கா தலைமையில் பகுதி செயலாளர் மகிழன்பன், சம்பத்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா, புரட்சிபாரதம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்,  தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஜான்பாண்டியன் பேசுகையில், கடந்த 30 வருடங்களாக எழும்பூர் தொகுதியிலேயே வசித்து வருகிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பை பெற்றவன். இதனால் நீண்ட காலமாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறேன். கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை அந்த வெற்றியை நமதாக்கி அதிமுக கூட்டணிக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு காணிக்கையாக்குவோம். அதனால் சுறுசுறுப்புடன் மக்களை நேரில் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கி நமது சின்னமான இரட்லைட இலைக்குவாக்கு சேகரித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ெவற்றியை உறுதி செய்து மீண்டும் இந்த நல்லாட்சி தொடர அனைவரும் உழைத்திட வேண்டும், என்றார்….

The post வெற்றியை உறுதி செய்ய வேண்டும்: ஜான்பாண்டியன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Zanbantian ,Chennai ,Tamil Nadu People's Advancement Corporation ,the Advancement of Tamil Nadu ,Indirect Alliance ,Elehampur Assembly Constituency ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...