×

முதல்வர், துணைமுதல்வர் உருவப் பொம்மை எரிப்பு: கம்பத்தில் பரபரப்பு

கம்பம்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே வெள்ளாளப்பட்டி புதூரில் சில தினங்களுக்கு முன், அனுமதியின்றி வைத்ததாக கூறி தேவர் சிலையை போலீசார் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் 11 பெண்கள் உட்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைக் கண்டித்து நேற்று தேனி மாவட்டம், கம்பம், போக்குவரத்து சிக்னல் முன்பு, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நகர செயலாளர் அறிவழகன் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, முக்குலத்தோருக்கு எதிராக செயல்படுவதாக கூறி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவப்பொம்மையை எரித்தனர். போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுதொடர்பாக 24 பேரை கைது செய்தனர்….

The post முதல்வர், துணைமுதல்வர் உருவப் பொம்மை எரிப்பு: கம்பத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : CM ,Deputy ,Gampam ,Vellapatti Budur ,Melur, Madurai district ,Devar ,
× RELATED கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்...