×

அரசியல் அழுத்தம் காரணமாக மநீம பொருளாளர் வீட்டில் ரெய்டு: கமல்ஹாசன் சொல்கிறார்

கோவை: கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி ம.நீம வேட்பாளர் தங்கவேலு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் வந்த கட்சி தலைவர் கமல்ஹாசன் அளித்த பேட்டி: மநீம பொருளாளர் வீடு, அலுவலகத்தில் ரெய்டு நடப்பது அரசியல் அழுத்தமாக இருக்கலாம். ரெய்டு குறித்து முதலில் அவர்கள் பதில் அளிக்கட்டும். பின்னர் நான் கருத்து கூறுகிறேன். என்னை ஹெலிகாப்டரில் போக வைத்தது மக்கள்தான். நான் அரசு பணத்தில் செல்லவில்லை. என் பணத்தில்தான் செல்கிறேன்.  என்னை பல இடங்களில் இடையூறு செய்ய ஆரம்பித்து  இரண்டு, மூன்று வருடம் ஆகிறது. எங்கள் கூட்டத்திற்கும் சுலபமாக அனுமதி கிடைப்பது இல்லை. இருப்பினும் குறுகிய காலத்தில் செல்லத்தான் ஹெலிகாப்டர் பயன்படுத்துகிறேன் என்றார். …

The post அரசியல் அழுத்தம் காரணமாக மநீம பொருளாளர் வீட்டில் ரெய்டு: கமல்ஹாசன் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Kamalhasan ,Govai ,Govai North Assembly Constituency ,neema ,thangavelu ,Mania ,
× RELATED ‘மசாஜ், கால் கேர்ஸ்’ என ஆசை காட்டி பல...