×

அதிமுகவுக்கு எதிராக சுயேச்சையாக வேட்புமனு சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்து, அதிமுக வேட்பாளரை தோற்கடிப்பேன் என பேட்டி அளித்த சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை எதிர்த்து, சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளதோடு மட்டுமில்லாமல், அதிமுக வேட்பாளரை தோற்கடிப்பேன் என்று செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ள காரணத்தினால், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சேர்ந்த எம்எல்ஏ சி.சந்திரசேகரன் இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post அதிமுகவுக்கு எதிராக சுயேச்சையாக வேட்புமனு சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chendamangalam MLA ,Achikuva ,Chandrasekaran ,Chennai ,Chendamangalam ,MLA ,CM ,Chandrasekarana Party ,Ayakkam Chandrasekaran ,Dinakaran ,
× RELATED இலக்கை நிர்ணயித்து உழைத்தால் நினைத்த...